நாம் பிரிந்த பல நாட்களுக்கு பிறகு
வான்திரையில் முகிலெழுதுக்களால்
நீ எழுதிய என் பெயர்
கவனிக்காத சிறு பொழுதில்
சுவடின்றி மறைவது போல
வளியோடு கரைந்து விட்டு
வலியோடு உறைந்திருந்த
ஒரு முன்னிரவு பொழுதில்
கடலைடைந்த நீரின் மறுதலையாய்
நீ என்னை தொடர்பு கொண்ட போதும்
உனக்கு தேவையானதை
என்னிடம் கேட்டு
தெரிந்து கொண்ட போதும்
நன்றி என கூறி
தொடர்பை துண்டித்த போதும்
என் குரலில் ஏற்பட்ட
சிறு நடுக்கத்தை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
*பஞ்சவர்ண சோலையிலும் காணலாம்