சமீபமாக என்னை தொடர்ந்து வந்த
ஒரு வெற்று பிம்பத்திற்கு
உருவமிட விழைந்து
பல உருவங்கள் புனைகையில்
இடும் உருவத்தை எல்லாம்
விழுங்கிக்கொண்டு வெற்று
பிம்பமாகவே எட்டிப்பார்த்தது
உறங்கும் போதும் மற்ற நேரத்திலும்
பதுங்கி தனிமையில் சிக்குண்டால்
என்னை விழுங்க முயல்கிறது
என் கற்பனையை உண்டு வளர்ந்த
அது நாளடைவில் என் உருவை
மாற்ற முயல்கிறது
இதனால் பெரும்பாலும் தனிமையை
தவிர்த்து வந்த நான்
தனித்திருக்க நேருகையில் அதன்
செயப்படுபொருளாய் ஆகிறேன்
விரைவில் என் உருவம்
மாறிவிடும் அபாயம் உள்ளதால்
இக்குறிப்புகளை அவசரமாய்
இங்கு பதிகிறேன்
*நான் பஞ்சவர்ணசோலையில் பதிந்தது