ஓய்வுக்காக காத்திருக்கும் வேளையிலும்
முடிவெடுக்க வேண்டிய தருணங்களிலும்
இச்சை செயல்களின் முற்பகுதியிலும்
என்னுள் தோன்றும் ஆயிரமாயிரம் எண்ணங்கள்
புற்றீசல் போல் வெளிவந்து
என்னை உள்ளிழுத்துச் செல்லும்
அவை பசிக்காக நானா
என் பசிக்காக அவைகளா
என சிந்திக்கும் வேளையில்
அவைகள் ஓங்கும் சக்தி ஒடுங்கும் சக்தி
என ஈரணியில் பிரிந்து போரிட துவங்க
என ஈரணியில் பிரிந்து போரிட துவங்க
வேங்கைகளின் வேட்டைச் சண்டையை
வேடிக்கை பார்க்கும் குற்றுயிர் மானாய்
போரை கவனிக்கையில் பல நேரங்களில்
ஓங்கும் சக்தி ஒடுங்கியும்
ஒடுங்கும் சக்தி ஓங்கியும் செயல்பட
பெரும்பாலும் ஓங்கும் சக்தியின் வீரர்கள்
ஒடுங்கும் சக்தி ஓங்கியும் செயல்பட
பெரும்பாலும் ஓங்கும் சக்தியின் வீரர்கள்
சோர்ந்தும் போரிட வலிமையின்றியும்
எந்நேரத்திலும் போரிலிருந்து பின்வாங்க
ஆயத்தமாகவும் இருக்கவே
ஒடுங்கும் சக்தியே பலமுறை வென்று
தன் முடிவை செயல்படுத்தும்
தன் முடிவை செயல்படுத்தும்
இது போன்ற போர்களின் முடிவுகளே
என் சுயத்தை வரையறை செய்யும் காரணிகளாகி
நாளடைவில் ஓங்கும் சக்தியே சிந்தனையாய்
ஒடுங்கும் சக்தியே செயலாய் மாறி
செயலென்னும் வெந்நீரில் சிந்தனை மீன் நீந்தும்
போர்களும் தக்கென தழைத்தலுமே மாறிலிகளாய்...